யாழ்ப்பாணம் முகாமையாளர் மன்றம் ஏற்பாட்டில் நாளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.சுமந்திரன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
15.5.2015 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ” வெளியில் தமிழர்களுக்கு உள்ள வழி”(A WAY OUT FOR TAMILS) என்ற தலைப்பில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது . அண்மைக்காலமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வரும் இந்நிலையில் இந்த கூட்டம் இருவருக்கிடையிலான ஒரு பொது விவாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது
இருவரும் சட்டத்தரணிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.