ஒரு இனத்துடன் செயற்பட முடியாதவர்கள் எவ்வாறு இன்னொரு இனத்துடன் செயற்படுவீர்கள்? -அஸ்மின் கேள்வி

ஒரே இனத்தினுடைய மற்றொரு தரப்புடன் இணக்கப்பாட்டினை கொண்டு செயற்பட முடியாதவர்கள் மற்றொரு இனத்துடன் எவ்வாறு இணக்கப்பாட்டினை செய்வீர்கள் என வடக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அஸ்மின் எதிர்க்கட்சி தலைவரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

ayub-asmin

வடக்கு மாகாண சபையின் 14ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது அதில் பிரேரணைகள் தொடர்பிலான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வியினை எழுப்பியிருந்தார்.