ஏ – 9 வீதி புனரமைப்பு பெப்ரவரிக்குள் நிறைவு

ஏ – 9 வீதி புனரமைப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாத்திற்குள் நிறைவு பெறும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டப் பணிப்பாளர் மரியதாசன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற வீதி அகலிப்பின் போது பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் மற்றும் அபிவிருத்தியானால் ஏற்படுகின்ற சாத, பாதகங்கள் தொடர்பான விளக்கமளிக்கும் கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வட பகுதியில் பெருமளவான வீதிகள் சீனா மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வீதி அபிவிருத்திப் பணிகள் யாவும் எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் முடிப்பதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனினும் வீதி அகலிப்பு பணிகள் யாவும் 2013 ஆம் ஆண்டு நடுப்பகுதயில் முடிவுபெறும் என்று நம்புகின்றேன். ஏ-9 பிரதான வீதியின் அகலிப்பு பணிகள் பெப்ரவரி மாத்திற்குள் நிறைவுபெற்றுவிடும்” என்றார்.

யாழ் மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், யாழ் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor