Ad Widget

எழுவைத்தீவு இறங்குதுறை புனரமைப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்! – டக்ளஸ் தேவானந்தா

மக்களின் போக்குவரத்து செயற்பாடுகளுக்கு ஏதுவாக எழுவைத்தீவு இறங்குதுறையை புனரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேற்படி இறங்குதுறை நெடுங்காலமாக பழுதடைந்துள்ள நிலையில் இதனூடாகப் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாவதாக தீவகப் பகுதி அபிவிருத்தி தொடர்பில் நேற்றைய தினம் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இச் சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், எழுவைத்தீவு இறங்குதுறை புனரமைப்பு தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதே நேரம், தீவகப் பகுதியின் சில அபிவிருத்திப் பணிகளுக்காக அமைச்சரவை நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டுள்ளது. இதனை சாதகமாகப் பயன்படுத்தி, தீவகப் பகுதி மக்கள் உச்ச பயன்களைப் பெறும் வகையில், அம் மக்களின் பங்களிப்புக்களுடன் திட்டங்களை முன்னெடுப்பது அவசியம். வடக்கு மாகாண சபை அக்கறை எடுத்திருந்தால் மேற்படி இறங்குதுறையை எப்போதோ புனரமைத்திருக்கலாம்.

இந்த வருடமும் கடந்த வருடங்களிலும் செலவு செய்யாமல் திறைசேரிக்கு திருப்பி அனுப்பிய நிதியில் எவ்வளவோ அபிவிருத்திப் பணிகளை வடக்கு மாகாண சபை செய்திருக்கலாம். ஆனால், அவர்களுக்கு இது பற்றி அக்கறையோ, திறமையோ கிடையாது என்பதையே அவர்களது செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts