‘எழுக தமிழ்’ பேரணிக்கு யாழ். கடற்றொழிலாளர் சம்மேளனம் ஆதரவு!

நாளை 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணிக்கு உலகத் தமிழர்கள் பேராதரவு வழங்கியுள்ள நிலையில், தங்களது கடற்றொழிலாளர் சங்கமும் முழு ஆதரவை வழங்கவுள்ளதாக யாழ். கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் வேலுப்பிள்ளை தவச்செல்வம் தெரிவித்துள்ளார்.

fish-thavachchelvam

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யுத்த காலத்தில் எப்படி இருந்தார்களோ, அப்படியே இன்றும் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். அபிவிருத்திகள் தென்பகுதியிலேயே இடம்பெறுகின்றன. நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் என இந்த நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்தபோது கூறியது. ஆனால், இன்று அந்த அரசியல் தீர்வு கூட கேள்விக்குறியாகியுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம் பொருந்திய சக்தியாக இருக்கின்ற போதிலும், இன்று அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுவதால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது என்றார்.

 

எழுக தமிழ் தொடர்பான மேலதிக செய்திகளுக்கு..

Recommended For You

About the Author: Editor