Ad Widget

எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் – வடமாகாண முதலமைசர்

மலரும் தீபாவளி திருநாளில் வடகிழக்கு மக்களின் வாழ்வில் இருக்கும் துன்ப துயரங்கள் மறைந்து நல்வாழ்வு மலரட்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது தீபாவளி நல்வாழத்துக்களை தெரிவித்துள்ளார்.

இருள் நீங்கி ஒளி சேரும் ஒரு நாள். பழையன கழிதலும், புதியன வருதலும் பழைய இருளடைந்த வாழ்க்கை நீக்கப்பட்டு, புதியதொரு ஒளி மிகுந்த வாழ்க்கையை வரவேற்பதே தீபாவளியின் குறிக்கோள்.

வடகிழக்கு தமிழ் மக்களை பற்றி யோசிக்கும் போது, எமது தமிழ் மக்கள் இருண்ட வாழ்க்கையிலேயே இருந்து வருகின்றார்கள்.தீபாவளி தொடர்ந்து இருளாக இருக்காது. ஓளியாக மாறவேண்டும். என்பதே எமது தீபாவளி திருநாளில் இருக்கும் கரிசனையான எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ஆகும்.

அந்த வகையில் சிறையில் வாடுகின்றவர்கள் சிறையில் வாடும் சிறைக் கைதிகளில் சிலரை விடுதலை செய்து மற்றவர்களை இருளில் அடைப்பது நல்லதல்ல.தீபாவளி தினத்தினை முன்னிட்டு, கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்பதுடன், சிறைக்கைதிகளின் வாழ்வில் வெளிச்சம் பெற பிரார்த்திப்போமாக.

எமது மக்களில் பலர் இருண்ட வாழ்க்கையில் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றார்கள். தமது பிள்ளைகளை சகோதர சகோதரிகளை, தாய்மார்களை பறிகொடுத்து காணாமல் போனோர்கள் என்ற பெயரில் பறிகொடுத்து விட்டு, துன்பப்பட்டு கொண்டு இருக்கின்றார்.

பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமன்றி போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் எம்மிடையே இருக்கின்றார்கள். காணிகளை, சொத்துக்களை இழந்தவர்கள், மீளவும் வாழ்வாதாரத்தினைப் பெற முடியாத கட்டத்தில் இருக்கின்றார்கள்.

அவர்களின் இருண்ட வாழ்க்கை மாறி ஒளியான வாழ்க்கை வர வேண்டுமென்று பிரார்த்திப்பதுடன், விதவைப்பெண்களின் வாழ்க்கையை ஒளியேற்றுவதென்பது எமது கரிசனையாக இருப்பதுடன், இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு நன்மைகளை, ஆதாரங்களை கொடுக்க கூடிய நல்லதொரு நாளாக தீபாவளி மலரட்டும்.

இத் தீபாவளி திருநாளில் எமது தமிழ் மக்களின் வாழ்வில் ஒளி பிறக்கட்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.

Related Posts