எரிபொருள் விநியோகம் யாருக்கு?? – முழு விபரம் இதோ!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் போக்குவரத்து, சுகாதாரம், விமான நிலையங்கள், புகையிரதம், துறைமுகங்கள், முப்படைகள் மற்றும் விவசாய போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இந்த தீர்மானம் ஜூலை 10ம் திகதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.