எரிகாயங்களுக்குள்ளான பெண் வைத்தியசாலையில்

fire2குருநகர் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பெண் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துள்ளார்.

இந்தப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

எரிகாயங்களுக்குள்ளான நிலையில் இந்தப் பெண் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.