எமது போராட்டம் நிறுத்தப்படவில்லை-முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

ஆயுதம் ஏந்தினோம் அது மௌனிக்கப்பட்டு விட்டது. ஆனால், எமது போராட்டங்கள் நிறுத்தப்படவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

நல்லைக்குமரனின் 24வது மலர் வெளியீட்டு விழா நிகழ்வு யாழ்.நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எமது தனித்துவமான மனித இயல்பையும் மனித வளத்தினையும் பாவிக்க வேண்டும். எமது அறிவினைப் பாவிக்க வேண்டும். அந்த வகையில், எமது இளைஞர்கள் தமது வகிபாகத்தினை வேறு விதமாக செயற்படுத்திக்கொள்ள வேண்டும் அல்லது அதற்கான திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

கொழும்பிற்கு சென்றால், அரசாங்கத்திற்கு விட்டுக்கொடுக்கலாமே என அங்கிருப்பவர்கள் கேட்கின்றார்கள். ஏனையவர்கள் விட்டுக் கொடுக்கின்றார்கள். நீங்கள் ஏன் இறுக்கமான நடைமுறையை முன்னெடுக்கின்றீர்கள் என அவர்கள் கேட்கின்றார்கள்.

எமக்குத் தேவையானவற்றினையும், அதன் உண்மைகளையும் எடுத்துக்கூறும் போது, அது தவறென்று எடுத்துக் கொள்கின்றீர்கள் என நான் பதிலளித்தேன் என்றார்.

Recommended For You

About the Author: Editor