எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு யாழில் உரிமை முழக்கம்!

எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு என்ற உரிமை முழக்கத்துடன் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் நில சுவிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தென்னிலங்கை முற்போக்கு கட்சிகளும் கலந்து கொண்டன.
jaffna-24-04

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் எங்கள் நிலங்களை விட்டு இராணுவம் வெளியேவேண்டும் எமது மண்ணில் நாங்கள் ஆளும் உரிமை எமக்கு வேண்டும் என்ற கோசங்களை
எழுப்பியிருந்தனர்.
jaffna-2-24-04

jaffna-5-24-04

முற்று முழுதாக பொலிஸாரின் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் அரச புலனாய்வுப் பிரிவினர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களையும் அரசியல் தலைவர்களையும் புகைப்படம் எடுப்பதில் குறியாக இருந்தனர்.
jaffna-4-24-04

jaffna-3-24-04

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்பபை வெளிப்படுத்தினர்.

அரசு மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியும் தாங்கிய வாறும் மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் 200 மேற்பட்ட பொலிஸாரும் புலனாய்வாய்ளர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.
jaffna-24-04-7

நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அக் கட்சியின்பொதுச் செயலாளர் கஜேந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், நவசமாயக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் பாக்கிய முத்து சரவனன், மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன், கொழும்பு மாநாகரசபை உறுப்பினர் பாஸ்கரா மற்றும் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

எங்கள் நிலங்களைப் பாதுகாக்க தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளோம்- பா.உ சிறிதரன் தெரிவிப்பு

எங்கள் நிலங்களைப் பாதுகாப்பதற்கு தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய நிலங்கள் வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. எமது பெண்கள், கலாச்சாரங்கள் திட்டமிட்டப்பட்ட வகையில் அழிக்கப்படுகின்றன.

எமது மக்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் காடுகளில் கொண்டு சென்று அடைக்கப்பட்டுள்ளனர்.

எமது வாழ்விடங்கள் சிங்கள அரசாங்கத்தால் அபகரிக்கப்படுகின்றன. இவற்றை காப்பாற்றுவதற்கு தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். போராட்டங்கள் மூலமே எமது நிலங்களை மீட்பதற்கு எம்மால் முடியும் என்றார்.

sritharan_jaffna_0011

தமிழர் தாயக பூமியில் நடைபெறும் திட்டமிட்ட நிலப் பறிப்பை சர்வதேசம் உடனடியாக தலையிட்டு நிறுத்த வேண்டும் – செல்வாராச கஜேந்திரன்

தமிழ் மக்களின் தாயக பூமியில் நடைபெறும் திட்டமிட்ட நிலப் பறிப்பை சர்வதேசம் உடனடியாக தலையிட்டு நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரன் கோரியுள்ளனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மக்களின் வாழ்வியல் நிலங்களைப் பறித்து எமது மக்களை உள்நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்க இந்த அரசு முயற்சிக்கின்றது. அவர்களின் காணிகளில் இராணுவத்தினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வீடுகளை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

6500 வரையான ஏக்கர் நிலப்பரப்பு வலி.வடக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். இந்தக் காணிகளில் பாரிய படை முகாம்களை அமைத்து இராணுவத்தினரை நிரந்தரமாக தமிழர் பிரதேசங்களில் தங்கியிருக்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

தமிழ் தேசத்தின் செத்துக்களாக இருக்கும் தமிழர்களது காணிகளை பறித்து அவர்களை நாடற்றவர்களாக்குவதையும் எதிர்காலத்தில் எமது தேசத்தை முழமையான சிங்கள தேசமாக மாற்றுவதற்கு அரசு முயன்று வருகின்றது.

தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையின் கீழ் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவி புத்த சிலைகளையும் பௌத்த மதக் கொள்கைகளைப் பரப்பி தமிழர் தாயக தேசம் ஒன்று இருந்ததற்கான எந்த வித ஆதாரமும் இல்லாமல் செய்வதற்கு அரச இயந்திரம் செயற்பட்டு வருகின்றது.

முள்ளிவாக்காலில் முற்றுப் பெற்ற இனப் போர் இன்று காணிப் போராக மாறியுள்ளது எங்களை எங்கள் நிலத்தில் சுயகௌரவத்துடன் வாழ்வதற்கு சர்வதேசம் எங்களுக்கான நிடைக்கால நிர்வாக அலகு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றார்.

Recommended For You

About the Author: Editor