என்னை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கக் கோரும் அதிகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி. இராணுவப் பின்னணி கொண்டவர் ஆளுநராக வடக்கிற்குத் தேவையில்லை என்றும், அவரை நீக்கி விட்டு, சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், வடக்கு மாகாணசபையின் முதல்நாள் அமர்வில் முதலமைச்சர் உரையாற்றியிருந்தார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வடக்கு மாகாண ஆளுநர்,
மாகாணத்தின் ஆளுநர் ஜனாதிபதியின் பிரதிநிதி. எனினும் சிலர் ஆளுநரை நீக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
ஆனால் அது நடக்கப் போவதில்லை. வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காகவே நான் உள்ளேன். என்னை நீக்கக் கோரும் உரிமை விக்னேஸ்வரனுக்குக் கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.