என்னிடம் பல கேள்விகள் உள்ளன; நவநீதம்பிள்ளை

Navaneetham-pillai-tamilmirrarஇலங்கையில் மனித உரிமை நிலைமையை பற்றிய முழு அறிக்கையை கொடுக்க தனக்கு காலம் எடுக்குமெனவும், இலங்கையில் மனித உரிமை நிலைமை தொடர்பில் என்னிடம் பல கேள்விகள் உள்ளன என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள யு.என்.என்.சீ.ஆர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அமுலாகும் செயற்றிட்டங்கள் மற்றும் அமுலாக்கப்பட்ட கொள்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அபிப்பிராயம் பெறப்பட்டதா என தான் அறிய விரும்புவதாக அவர் அங்கிருந்த பொதுமக்களிடம் கேட்டுள்ளார்.

இலங்கை விஜயத்தின் போது தனக்கு அளிக்கப்பட்ட பணி இலங்கையின் மனித உரிமை நிலைப்பற்றிய தகவலை சேகரிப்பததாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வடக்கில் இடம்பெறும் மீள்கட்டுமான செயன்முறையிலிருந்து மக்கள் நன்மையடைவர் என்பதனை தன்னால் தெளிவாக காணமுடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.