ஊர்காவற்றுறை தவிசாளரின் வாகனம் பறிமுதல்!

judgement_court_pinaiஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளருடைய வாகனத்தினை, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட எதுவித ஆவணங்களுமில்லாமல் மதுபோதையில் செலுத்திச் சென்றவரை 50,000 ரூபா சரீரப் பிணையில் செல்லவும், குறித்த வாகனத்தினைப் பறிமுதல் செய்யவும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் உத்தரவிட்டார்.

ஊர்காவற்றுறையில் வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த ஊர்காவற்றுறைப் பொலிஸார், தவிசாளரின் வாகனத்தினைச் செலுத்திச் சென்ற மேற்படி நபரினை கடந்த வெள்ளிக்கிழமை (13) இரவு கைது செய்திருந்தனர்.

தொடர்ந்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து, சந்தேகநபரை மன்றில் ஆஜர்படுத்திய போதே பதில் நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

Related Posts