ஊடக சுதந்திரத்துக்கான உயர் விருது உதயனுக்கு

பிரான்ஸின் தலைநகர் பரிஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் எல்லை கடந்த ஊடகவியலாளர் அமைப்பு ஆண்டு தோறும் சர்வதேச ரீதியாக வழங்கிவரும் ஊடக சுதந்திரத்துக்கான விருதுகளில் மிக முக்கிய விருது உதயனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

kanamayil

பிரான்ஸின் வடகிழக்குப் பிராந்தியமான ஸ்ரார்ஸ்பேர்க்கில் நேற்று இரவு உலக ஊடகவியலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்த ஒரு நிகழ்வில் வைத்து இந்த விருது உதயனுக்கு வழங்கப்பட்டது. இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற இந்த நிகழ்வில் உதயன் நிர்வாக இயக்குநர் ஈ.சரவணபவன், உதயன் பிரதம ஆசிரியர் ம.வ.கானமயில்நாதன் ஆகியோர் கூட்டாக இந்த விருதினை பெற்றுக்கொண்டனர்.