உள்ளூர் உற்பத்திகளுக்கு புதிய சந்தை வாய்ப்பு

Jaffna_makesஉள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இருந்து உற்பத்திப் பொருள்களை உல்லாசப் பயணிகள் நேரடியாக கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை வடக்கு மாகாணச் சுற்றுலாத்துறை ஒன்றியம் மேற்கொள்ளவுள்ளது.

வடக்கு மாகாணத்துக்குள் நாளாந்தம் அதிக எண்ணிக்கையான உல்லாசப் பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் உள்ளூர் உற்பத்திப் பொருள்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

எனினும் தற்போது உள்ளூர் உற்பத்திப் பொருள்களை விட தென்னிலங்கை உற்பத்திப் பொருள்கள் சந்தையில் இடம்பிடித்துள்ளதால் உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.

உல்லாசப் பயணிகளின் ஆர்வத்துக்கு ஏற்ப உள்ளூர் உற்பத்திப் பொருள்களை சந்தையில் காட்சிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளமையால் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை ஒன்றியம் அதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

உள்ளூர் உற்பத்தியாளர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களை ஒன்றியத்துடன் இணைத்து அதனூடாக உல்லாசப் பயணிகள் உள்ளூர் உற்பத்திப் பொருள்களை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் முதற்கட்டமாக தீவகம், வன்னிப் பிரதேசங்களைச் சேர்ந்த உள்ளூர் உற்பத்தியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.