உருகுலைந்த நிலையில் வயோதிப பெண்ணின் சடலம்

யாழ். பருத்தித்துறை இன்பசிட்டி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர், அதேயிடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் சரோஜாதேவி (வயது 65) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், குறித்த வயோதிப பெண் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், வயோதிப பெண்ணின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அயலவர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்த போது, வயோதிப பெண் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொதுமக்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததையடுத்து, திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ். சிவராஜ்ஜூடன், அவ்விடத்துக்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தாக தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்ட வருகின்றனர்.