உயிர்பாதுகாப்பு பொலிஸ் பிரிவினால் 27 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்

யாழ்.கசூரினா கடற்கரையில் கடமையில் ஈடுபட்டு வரும் உயிர்பாதுகாப்பு பொலிஸ் பிரிவு இதுவரையில் 27 பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளதாக வடமாகாண உயிர் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி இன்று எம்.ஹேரத் திங்கட்கிழமை (06) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கசூரினா கடற்கரைக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்திட்கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் உயிர் பாதுகாப்பு பொலிஸ் என்னும் பிரிவு உருவாக்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

நீரினால் ஏற்படும் விபத்துக்களுக்கு முதலுதவி செய்து நீரில் மூழ்குபவர்களை காப்பாற்றுவது தொடர்பான பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

ஒரு மனிதன் தன்னை காப்பாற்றுவதோடு நில்லாது மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டுமென்பதே இப் பாதுகாப்பு பிரிவின் நோக்கமாகும். உயிர் பாதுகாப்பு பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட்ட பின்னர், இதுவரையில் கசூரினா கடற்கரையில் 27 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

இருந்தும், அதிக மதுபோதையில் நீந்த முடியாத நிலையில் நீரில் மூழ்கிய மூவரை காப்பாற்ற முடியவில்லை’ என அவர் மேலும் தெரிவித்தார்.