Ad Widget

உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் சம்பந்தன் சென்றது எவ்வாறு? விசாரணையில் இராணுவம்!

உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் சம்பந்தன் சென்றது எவ்வாறு என இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலி. வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்தை நேரில் பார்வையிட்டார்.

இராணுவக் குடியிருப்பு அமைந்துள்ள அந்தப் பகுதிக்குள் நுழைந்த அவரின் வாகனம் சாதரணமாக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது.

அவரின் வாகனத்தை உள்ளே நுழைய அனுமதித்தற்காக அன்றைய தினம் வாயிலில் காவல் கடமையில் ஈடுபட்ட இரு இராணுவத்தினரும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேசமயம் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைவதற்கான வாயிலில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு இரு இரும்புக் கேற்களால் தடை போடப்பட்டுள்ளன.

அத்துடன் வழமையான இராணுவக் காவலிலும் பார்க்க அதிக அளவில் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளன. இராணுவத்தினருடன் இராணுவப் பொலிஸாரும் பாதுகாப்புக் பணியில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts