உயர்தேசிய டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம்

உயர் தேசிய டிப்ளோமாதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்ட செயலகத்தில் வைத்து மேற்படி நியமனங்கள் நேற்றய தினம் (08) வழங்கப்பட்டன.

ag6

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் டிப்ளோமாரிதாரிகளுக்கான நியமனப் பத்திரங்களை வழங்கிவைத்தார்.

உயர் தேசிய டிப்ளோமாதாரிகள் 423 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.
இதேவேளை பயிற்சி கிராமசேவையாளர்கள் 33 பேருக்கும், முறையான கிராமசேவையாளர்கள் 95 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன.

app3

இதன்போது தமக்கான நியமனங்களை பெற்றுத் தந்தமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நன்றிகளை நியமனம் பெற்றவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர்.