Ad Widget

உயர்கல்விக்குத் தேவையான அபிவிருத்தி செயற்றிட்டங்கள்

யாழ்.மாவட்டத்தில் உயர் கல்வியை வழங்கும் நிறுவனங்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு 7 வகையான அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்மொழிந்து அந்தச் செயற்றிட்டங்களை மேற்கொள்ள 2,375 மில்லியன் ரூபாய் நிதி தேவையென, யாழ்.மாவட்டச் செயலகத்தால் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்திடம் கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் உயர் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியன யாழ்ப்பாணத்தில் உயர்கல்வியை வழங்கும் நிறுவனங்களாக இருக்கின்றன. இவை இரண்டிலும் சுமார் 3,500 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

இந்த மாணவர்களின் கற்றல் மற்றும் இதர செயற்பாடுகள் தொடர்பில் இந்நிறுவனங்களிலுள்ள பற்றாக்குறை மற்றும் தேவைகள் குறித்து ஆராயப்பட்டு, 7 செயற்றிட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்ப மற்றும் மொழிக்கற்கை மையக்கட்டடம் அமைப்பதற்கு 345 மில்லியன் ரூபாயும் நிர்வாகக் கட்டடம் அமைப்பதற்கு 525 மில்லியன் ரூபாயும் மைதான அபிவிருத்திக்கு 175 மில்லியன் ரூபாயும், ஆய்வுகூடம், கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் தளபாடங்களுக்கு 525 மில்லியன் ரூபாயும், பாவனையிலுள்ள கட்டங்களை புனரமைக்க 550 மில்லியன் ரூபாயும், விடுதி கட்டடம் அமைப்பதற்கு 100 மில்லியன் ரூபாயும், மூன்று மாடிக் கட்டத் தொகுதிகள் 4 இனது இறுதி வேலைகளை முடிப்பதற்கு 155 மில்லியன் ரூபாயும் தேவைப்படுகின்றதாகக் கூறப்பட்டுள்ளது.

Related Posts