உதயபுரம் மீள் குடியேற்ற கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் இல்லை

vali_vadakkuயாழ், மணியந்தோட்டம் வீதியில் உள்ள உதயபுரம் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் எவ்விதமான அடிப்படைவசதிகள் அற்ற நிலையில் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பகுதியில் இருந்து 1995 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் 15 வருடங்களுக்குப் பின்னர் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

இப்பகுதியில் 205 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள போதும் இங்கு குடியமாத்த்தப்பட்ட குடும்பங்களில் சில குடும்பங்களுக்கு மட்டுமே தற்காலி வீடுகள் வழங்கப்பட்டுள்ளது என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.அத்துடன் போக்கு வரத்து,குடிநீர், பாடசாலை, மலசலகூடங்கள் இல்லாத நிலையிலேயே அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அண்மையில் பெய்த கடும் மழையினால் அப்பகுதியில் உள்ள குடிசைகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு அங்குள்ள கிணறுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் குடிநீர் பெறுவதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.