உடுப்பிட்டியில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் – இராணுவப் பாதுகாப்பு

உடுப்பிட்டியில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதை அடுத்து பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோயில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாட்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியுள்ளது.

இந்த மோதலில் சிலர் தலைமறைவாகிய நிலையில், வல்வெட்டித்துறை பொலிஸாரின் அழைப்பின் பேரில் நேற்று முதல் (புதன்கிழமை) இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

இதனைடுத்து குறித்த கிராமத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor