அனுராதபுரச் சிறையில் உண்ணவிரதம் இருக்கும் கைதிகள், ஈழத் தமிழர்கள் தமக்காக முன்னெடுத்த கடையடைப்பு உள்ளிட்ட ஆதரவுப் போராட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தல் கடும் உடல் நலப் பாதிப்பிற்கு அவர்கள் உள்ளாகியுள்ளனர்.
தமக்கான தீர்வு இனியும் கிடைக்காத பட்சத்தில் சாகும் வரையிலான கடும் உண்ணாவிரதப் போருக்கு அவர்கள் தயாராகி உள்ளனர்.
தற்போதைய உண்ணாவிரதப் போரில் தரப்படும் மருத்துவ சிகிச்சைகளையும் அவர்கள் மறுக்கப் போவதாக, அனுராதபுரத்தில் இருந்து சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.