இலங்கை விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியா ஒப்புதல்!!

இந்திய ரூபாயை வெளிநாட்டு கரன்சியாக அறிவிக்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் இந்திய ரூபாய் செல்லாது என்ற போதிலும் இலங்கை மக்கள் 10 ஆயிரம் டொலர் (ரூ.8 லட்சத்து 10 ஆயிரம்) மதிப்புள்ள இந்திய ரூபாயை வைத்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாயை இலங்கையில் உள்ள வங்கிகளில் கொடுத்து, வேறு நாட்டு பணமாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வங்கிகளில் ‘இந்திய ரூபாய் நாஸ்ட்ரோ கணக்குகள்’ தொடங்க இந்திய வங்கியுடன் இலங்கை வங்கிகள் ஒப்பந்தம் செய்துகொள்வது அவசியமாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.