இலங்கை வரலாற்றில் தனி இடம் பதித்தார் ஜனாதிபதி மைத்திரி!

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் அனுதாப பிரேரணையொன்றில் உரை நிகழ்த்திய முதலாவது ஜனாதிபதி என்ற பெயரை மைத்திரிபால சிறிசேன தன்வசப்படுத்தினார்.

நாடாளுமன்றம் நேற்று முன்தினம் முற்பகல் 10.30. மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பகட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், காலஞ்சென்ற அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தனவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையை சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்து உரையாற்றினார்.

அதன்பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரைநிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை இடம்பெற்றது.

இதன்மூலம் இலங்கை அரசியல் வரலாற்றில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்ட பின்னர், ஜனாதிபதியொருவர் அனுதாப பிரேரணையில் உரையாற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் அனுதாபப் பிரேரணையில் உரையாற்றினார்.

Recommended For You

About the Author: Editor