இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளில் மாற்றம் இல்லை என்பதே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிலைப்பாடு என, அவரது பேச்சாளர், ஸ்டீவன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்குள் சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் சிறந்த முறையில் நம்பகமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்பது செயலாளர் நாயகத்தின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.