இலங்கை கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 3 வீரர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்!

Cricket-Logoஇலங்கை பல்லேகலையில் எதிர்வரும் 12 ம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில் வடக்கு கிழக்கில் இருந்து மூன்று வீரர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

வடமாகாணத்துக்கான கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் ரவீந்திர புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, வடக்கில் இருந்து சென் பற்றிக்ஸ் கல்லூரியின் விக்கட் காப்பாளார் ரிஸான் டியூட்டர், கொக்குவில் இந்துக் கல்லுரியின் வேகப்பந்து வீச்சாளர் எஸ் சிலோஜன் மற்றும் மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் சஞ்சீவன் ஆகியோரே இலங்கை தேசிய அணிக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.