இலங்கையில் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை – இராணுவத் தளபதி

இலங்கையில் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் இதை உறுதிப்படுத்தியதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகள் வீடுகளில் இறந்தது குறித்து இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், நாட்டின் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை எனவும் ஏனைய அனைத்தும் நாட்பட்ட நோய்களால் ஏற்பட்டவை எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஊரடங்கு மற்றும் முடக்கல் நிலைகளின்போது வீடுகளில் தங்கியிருக்காது தேவையான போது மருத்துவசிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரு சிறந்த சுகாதார சேவை உள்ளது என்றும் யாரும் மறைக்கவோ அல்லது மருத்துவ சிகிச்சை பெறுவதைத் தவிர்க்கவோ கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

முடக்கல் நிலையில் இருக்கும்போதுகூட அவசர மருத்துவ தேவைகள் தேவைப்படுவோர் அம்புலன்சில் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய ஒரு பொறிமுறையை தாங்கள் நிறுவியுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்

வைரஸ் பாதித்த அனைவருமே இறந்துவிட மாட்டார்கள் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டவர்களில், 0.2 சதவீதம் பேர் கொரோனா காரணமாக இறந்தனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor