எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 153 பேர் இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பெண்களை விட ஆண்களுக்கு அதி வேகமாக எச்.ஐ.வி தொற்றால் வீக்கம் ஏற்படுவதாகவும் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது அதனை குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு தாக்கம் அதிகரித்த நிலையில் இன்னும் பலர் அதற்கான மருந்தினை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை என்றும் அந்த பிரிவு கூறியுள்ளது.
உலகம் முழுதும் உள்ள எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை 390 இலட்சத்தை எட்டியுள்ள நிலையில், அதில் 170 இலட்சம் பேர் மாத்திரமே அதற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.