இரு யுவதிகளுக்கு ஒரே அடையாள அட்டை இலக்கம்

ஆட்பதிவுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட ஒரே இலக்கங்களைக் கொண்ட இரு அடையாள அட்டைகளினால் இரண்டு யுவதிகளுக்கிடையில் குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி வழங்கப்பட்ட, 877033473V என்ற இலக்கம் கொண்ட அடையாள அட்டையாலேயே இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விருவரும் தமது அடையாள அட்டைகளை 10 வருடங்களாகப் பயன்படுத்தியுள்ள அதேநேரம், இருவரும் 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி பிறந்துள்ளனர்.

குறித்த இலக்கத்துக்குரிய அடையாள அட்டையைக் கொண்ட நொச்சியாகமப் பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர், அரசாங்க வங்கியொன்றுக்குச் சென்று வங்கிக்கடன் ஒன்றைப் பெறமுயன்றுள்ளார்.

எனினும், குறித்த அடையாள அட்டை இலக்கத்தை மற்றுமொரு யுவதியும் பயன்படுத்துவதாகவும், அந்த யுவதி, ஏற்கெனவே வங்கிக்கடன் ஒன்றைப் பெற்றுக்கொண்டு விட்டதாகவும் வங்கியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய யுவதி, ஹல்தொட்டு, பத்தேகமப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor