‘இருமுகன்’ படம் வசூலில் சாதனை!

‘சீயான்’ விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படம் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் நடிகர் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்த ‘இருமுகன்’ படம் கடந்த 8 ம் தேதி வெளியானது.கலவையான விமர்சனங்கள் வந்த பொழுதும் படம் நல்ல வசூல் செய்துள்ளது.

இது தொடர்பாக அதன் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தெரிவித்துள்ள தகவல்கள் பின் வருமாறு:

படம் ரிலீஸான இரண்டு வாரங்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. இருமுகன் தற்போதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது. சென்னையில் மட்டும் இதுவரை ரூ. 6 கோடி வசூல் செய்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor