இராணுவத்தினருடன் புத்தரும் போவார் – சிவாஜிலிங்கம்

வடக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேறினால் புத்தரும் அவர்கள் கூடவே சென்றுவிடுவார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

sivajilingam_tna_mp

வடமாகாண காணி பிரச்சினைகள் தொடர்பிலான விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபை கட்டிட தொகுதியில் நேற்று வியாழக்கிழமை (09) நடைபெற்றது.

இதில் முப்படைகளும் வடக்கிலிருந்து இவ்வருட இறுதிக்குள் வெளியேற வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

பொதுமக்களின் காணிகளில் இராணுவத்தினர் இராணுவ முகாம் அமைத்து இருக்கும் போது, புத்தர் சிலையொன்றையும் அதில் நிறுவி வழிபாடுகள் செய்து வந்தனர்.

தொடர்ந்து, இராணுவ முகாம் அகற்றப்படும் போது வழிபாட்டிற்காக வைத்திருந்த புத்தர் சிலையையும் கையோடு எடுத்து சென்றனர். அந்தவகையில், வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறும் போதும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.