இரவுநேர இராணுவ ரோந்துகள் அதிகரிப்பு, மக்கள் அச்சத்தில்!

tna_attack_army_002குடாநாட்டில் பெரும்பாலான இடங்களில் இராணுவ மினி முகாம்களை மூடிவரும் பாதுகாப்புப் படையினர் கிராமங்கள் தோறும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்றனர்.

பிற்பகல் வேளைகளிலும் இரவிலும் சைக்கிளில் படையினர் கிராமங்களின் வீதிகளில் வலம் வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இத்தகைய செயற்பாடு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குடாநாட்டில் பல வருடங்களாக சந்திகளில், கிராமப்புறங்களில் இயங்கி வந்த பல மினி முகாம்கள், காவலரண்கள் கடந்த சில நாட்களாக அகற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தற்பொழுது அதிகரித்துள்ள நிலையில் மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது.