Ad Widget

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10ம் திகதியை சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

2015ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமானது ‘எங்கள் உரிமையே எங்கள் சுதந்திரம்’ என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகிறது.

1945ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டு, பெப்ரவரி மாதம் 16ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு உதயமானது. 53 நாடுகளை அங்கமாகக் கொண்ட இக்குழு, முதல் வேலையாக சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அன்றைய அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

இக் குழுவின் சிபாரிசின்படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் நோக்கில் 1948, டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொது சபையால் உலக மனித உரிமைகள் தினம் ஏற்றுக்கொள்ளபட்டது. இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கின.

டிசம்பர் 10 என்ற இதே நாள் 1950 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச மனித உரிமைகள் தினமாக அறிவித்து அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

Related Posts