இந்து ஆலயங்களின் அழிப்புக்கு இந்து மாமன்றம் கண்டனம்.

all-ceylon-hindu-congressகாங்கேசன்துறை, பலாலி பாதுகாப்பு வலயத்தில் ஆலயங்கள் இடித்து அழிக்கப்படுகின்றமை இந்து மக்களின் உணர்வை புண்படுத்தும் செயலாகும். என்று அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் ,

நேற்று முன்தினமும் நேற்றும் காங்கேசன்துறை பலாலி பாதுகாப்பு வலயத்தில் இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டதையிட்டு இந்து மக்கள் எல்லோரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றோம்.

பாதுகாப்பு வலயத்தில் என்ன நடக்கிறது என்பது இருட்டடிப்புச் செய்யப்படுவதுடன் மாகாணத்தின் முதலமைச்சர் சத்தியவித்தகர் நீதியரசர் விக்கினேஸ்வரன் அவ்விடத்திற்கு சென்று உண்மையை அறிய முற்பட்டபோது அவரைக் கூட பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதையறிந்து இந்து மக்கள் சார்பில் கண்டனம் தெரிவிக்கின்றோம். அகில இலங்கை இந்து மாமன்ற உறுப்பினர் சென்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகனும் தடுத்து நிறுத்தப்பட்டதும் கண்டிப்புக்குரிய விடயம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .