இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு முதல் தவணைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன

india_houseஇந்தியாவின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்ட 8700 பேருக்கான முதல் தவணைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வீட்டுத்திட்டம் கடந்த 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

முதல்கட்டமாக ஆயிரம்வீடுகள் நிர்மாணிப்பதாக அறிவிக்கப்பட்ட போது, காணி தொடர்பாக காணப்பட்ட சிக்கலைத் தொடர்ந்து, அது நீண்டகாலமாக கிடப்பில் இருந்தது.

இந்த நிலையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்படி மூன்று மாவட்டங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 8700 பேருக்கான முதல் தவணைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து இந்த வருடத்தின் இறுதிக்குள் 10 ஆயிரம் வீடுகளை நிர்மானிக்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.