இந்திய மீனவர்கள் 26 பேருக்கும் 6 நாள் விளக்கமறியல்

arrest_1நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு 6 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். ஊர்காவற்துறை நிதிமன்ற பதில் நீதிவான் ஆர். சபேசன் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக இந்திய ரோலர் படகுகள் 5 மற்றும் படகில் வந்த 26 மீனவர்களும் வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில் இலங்கை கரையோரப்பாதுகாப்பு படையினர் மற்றும், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்திடம் சனிக்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஒப்படைக்கபட்ட 26 இந்திய மீனவர்களையும் யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தினர் யாழ். ஊர்காவற்துறை நீதிவான் நீதமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய வேளை 26 பேரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் ரமேஸ்கண்ணா கூறினார்.

தொடர்புடைய செய்தி

இந்திய மீனவர்கள் 26 பேர் கைது

Recommended For You

About the Author: Editor