இந்திய பாரதிய ஜனதா கட்சி எம்.பிக்கள் யாழ்.விஜயம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இந்த குழுவினரை பாரம்பரிய கைத்தொழில்கள் , சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் பலர் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர்.

இக்குழுவினர் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வடகடல் நிறுவனத்தின் வலை தொழிற்சாலையினை பார்வையிட்டுள்ளதுடன் யாழ்.ரில்கோ சிற்றி ஹோட்டலில் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து யாழ்.குடா நாட்டின் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த குழுவில் இந்திய பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிசங்கர் பிரசாத், சுரேஷ் பாபு மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் விவேக் கயுதீப், இந்திய பவுண்டேசன் நிறுவனத்தின் உறுப்பினர்கள் இருவர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

indian-visit2

indian-visit3

indian-visit4

indian-visit5

Recommended For You

About the Author: Editor