இந்திய தூதுவர் மீள்குடியேறிய மக்களுடன் சந்திப்பு

india-singaaஇலங்கைக்கான புதிய இந்தியத்தூதுவராக கடமையேற்று முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள வை.கே. சிங்ஹா, மீள்குடியேறியுள்ள பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அரியாலை மற்றும் எழுதுமட்டுவால் பகுதிக்குச் சென்று அங்கு மீள்குடியேறியுள்ள மக்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நேற்று புதன்கிழமை அரியாலைக்கு விஜயம் செய்த தூதுவரை யாழ் மாவட்ட மேலதில அரச அதிபர் ரூபினி வரதலிங்கம் வரவேற்றார்.

அப்பகுதியில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினை பார்வையிட்டதுடன் மீள்குடியேறிய மக்களைச் சந்தித்து அவர் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் தென்மாராட்சி பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டுள்ளார்.

அதேவேளை யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நல்லூர் சங்கிலியன் தோப்பில் நேற்று மாலை நடைபெற்ற தெய்வீக சுக அனுபவம் கலை நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்துகொணடு சிறப்பித்துள்ளார்.