இணையத்தில் நிதி மோசடி கவனம்!

web-virus-net-computerஇணையத்தை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபடும் செயல்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்தப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

மின் அஞ்சலை பயன்படுத்தி சிலர் இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.