Ad Widget

இடைக்கால புதிய பட்ஜட் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு :3 மடங்கினால் விலைகள் குறைப்பு

இன்றைய தினம் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சறிசேன அரசின் இடைக்கால வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது. பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடும். ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றுவார்.

இதனையடுத்து நிதியமமைச்சர் ரவி கருணாநாயக்க அரசாங்கத்தின் இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுவார் பிற்பகல் 1.15 தொடக்கம் 3 மணி வரை வரவுசெலவுத் திட்டம் மீதான உரை இடம்பெறும்.

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது., அரசி, பருப்பு, மா, சீனி, பால்மா, டின்மீன் என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுவதுடன் இந்த இடைக்கால பட்ஜெட் நிவாரண பொதியாக இருக்கும் என்று அரசாங்க தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அரச ஊழியர்களின் சம்பளம் 5000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகிறது

மற்றும் 37 அத்தியவசியப் பொருட்களுக்காக வரி அறவிடப்பட்டிருந்த நெத்தலிக்கருவாடு கிழங்கு சின்னவெங்காயம் பெரியவெங்காயம் வெள்ளைப்பூடு பயறு மிளகாய்த்தூள், ரின் மீன், சீனி அரிசி சோளம் உழுந்து கௌப்பி யோக்கட் பட்டர் கொடி முந்திரிகைப்பழம் தோடம்பழம் உள்ளிட்ட பொருட்கள் சந்தையில் விலைகள் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related Posts