இசை நிகழ்ச்சியில் பாடகர் மீது கல்வீச்சு

attack-attackயாழ். கெருடாவில் ஞானவைரவர் ஆலயத்தில் சனிக்கிழமை (09) இரவு இடம்பெற்ற இசைக்கச்சேரியில் எம்.சிவஞானம் (வயது 40) என்ற பாடகர் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்தனர்.

கல்வீச்சில் காயமடைந்த பாடகர் ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐந்து பேர் கொண்ட கும்பலினராலேயே இந்தக் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தாக்குதலில் ஒலி பெருக்கி சாதனங்கள் சிலவும் சேதமடைந்ததாகவும், இதனையடுத்து இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor