ஆளுநர்களின் 15 ஆவது மகாநாடு முதன்முதலாக யாழ்ப்பாணத்தில்!

ஆளுநர்களின் 15 ஆவது மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21, 22, 23 ஆம் திகதிகளில் இம்மாநாடு நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக நடைபெறும் ஆளுநர்களின் மகாநாடு தொடர்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் ஆளுநரின் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் ஆளுநர்கள் தங்கியிருக்கும் இடத்தின் பாதுகாப்பு, மாநாட்டு மண்டபத்தின் பாதுகாப்பு, மாகாநாட்டு நிகழ்வுகள் போன்ற விடயங்கள் இக்கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்டது.