ஆலயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

girl-hanging-rope-suicideவல்வெட்டித்துறைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் நேற்றுக் காலை 9 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நவரத்தினம் ராகவன் (வயது 23) மடந்தை வல்வெட்டித் துறை என்ற இடத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் நேற்று முன் தினம் இரவு முதல் காணாமற் போயிருந்தார்.

நேற்றுக் காலை மடந்தை பெரிய தம்பிரான் ஆலயதரிசன மண்டப வாயிலில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

சடலம் வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனை இடம்பெற்றதன் பின் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor