ஆரம்பமே பழரசம்; வடக்கு மாகாண சபையின் முன்மாதிரி

vigneswaran_opening_007வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்ற முதல் நிகழ்வான வலி.மேற்குப் பிரதேச சபையின் கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு நேற்று உள்ளூர் பழரசமே பரிமாறப்பட்டது.

வடக்கு மாகாண நிர்வாகம் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் மாகாண ஆளுகைக்குட்பட்ட வலி.மேற்கு பிரதேச சபைக் கட்டத் திறப்பு விழா நேற்று இடம்பெற்றது.

வடக்கு மாகாண சபையின் நிகழ்வுகளிலோ, கலந்துரை யாடல்களிலோ கொக்கோகோலா, பெப்சி போன்ற வெளிநாட்டு மென்பாங்களைப் பயன்படுத்த வேண்டாமென்றும், உள்ளூர் பழரசங்களையே பயன்படுத்துமாறும் வடக்கு மாகாண விவசாய அமைச்ர் பொ.ஐங்கரநேசன் கோரியிருந்தார்.

இதற்கமைய நேற்றைய நிகழ்வில் பழரசமே எல்லோருக்கும் பரிமாறப்பட்டது. இதன் பின்னர் பழரசம் அருந்தாதவர்களுக்கு வெளிநாட்டு மென்பானங்களும் பரிமாறப்பட்டன.