சுழிபுரத்தில் உள்ள தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை வேட்பாளர் ஆனந்தி சசிதரனின் வீடு மீதான தாக்குதலுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய நிராகரித்துள்ளார்.
ஆனந்தி சசிதரனின் வீடு இன்று அதிகாலை தாக்கப்பட்டது. அதில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீருடைய அணிந்த, அணியாத இராணுவத்தினரும் ஈபிடிபியினருமே தாக்குதலை மேற்கொண்டதாக ஆனந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில் இராணுவம் தம்மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
தொடர்புடைய செய்தி
கூட்டமைப்பு வேட்பாளர் அனந்தியின் வீட்டின் மீது தாக்குதல்; 8 பேர் காயம் ! தேர்தல் கண்காணிப்பாளரும் தாக்கப்பட்டார்!