ஆனந்தசங்கரிக்கு அமுத விழா

sangary-anandaதமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் 80 அகவை நிறைவையொட்டிய அமுதவிழா நிகழ்வு, கட்சியின் தலைவர் எஸ்.முத்துலிங்கம் தலைமையில் காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கிய உறுப்பினாகளான சட்டதரணி ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் வரதர் அணி செயலாளர் எஸ்.ஸ்ரீதரன், புளட் அமைப்பின் தலைவர் த.இ.சித்தார்த்தன் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட ஆதரவாளர்கள், பொது மக்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

இந்நிகழ்வின்போது, வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts