Ad Widget

ஆண்களே அதிகளவில் தற்கொலை!!

2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இடம்பெற்ற கொலைகள், பெண்கள் துஷ்பிரயோகம், தற்கொலைகள் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பான விரிவான அறிக்கை, இன்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவால், வௌியிடப்பட்டது.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி,

கொலைகள்

2014ம் ஆண்டு – 548
2015 நவம்பர் 30ம் திகதி வரை – 447
இதன்படி 2014ம் ஆண்டைவிட 2015ம் ஆண்டு கொலைகள் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் துஷ்பிரயோகம்

2014ம் ஆண்டு – 2008
2015 நவம்பர் 30ம் திகதி வரை – 1854

2015ம் ஆண்டு இடம்பெற்ற 1854 பெண்கள் துஷ்பிரயோகங்களில் 1501 சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் எனவும், அவற்றில் 1209 துஷ்பிரயோகங்கள் அவர்களது விருப்பத்துடனேயே இடம்பெற்றதாகவும் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்கொலைகள்

2014ம் ஆண்டு – 2484 ஆண்கள், 660 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
2015 செப்டம்பர் 30ம் திகதி வரை – 1856 ஆண்களும், 519 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

போதைப் பொருள்

2014ம் ஆண்டு 312 கிலோ கிராம் போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் 23,331 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2015ம் ஆண்டு 46 கிலோ கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 26,492 பேர் இது தொடர்பில் கைதாகியுள்ளனர்.

கஞ்சா

2014ம் ஆண்டு 19,644 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதோடு 43,683 பேர் இது தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2015ம் ஆண்டு 6569 கிலோகிராம் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 50,000 பேர் இது குறித்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீரில் மூழ்கிய மரணங்கள்

2014ம் ஆண்டு – 859
2015ம் ஆண்டு (முதல் ஒன்பது மாதங்களில்) – 688

விபத்து

2014ம் ஆண்டு – 2260
உயிரிழந்தவர்கள் – 2440
2015ம் ஆண்டு – 2566
உயிரிழந்தவர்கள் – 2771

Related Posts