ஆணைக்குழு முன்னிலையில் மன்னார் ஆயர் சாட்சியம்!

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 6 ஆவது அமர்வு மன்னார் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

mannar-ayar

கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பமான இந்த அமர்வு நேற்று சனிக்கிழமையும் நடைபெற்றது.

மூன்றாம் நாளான இன்று மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெறுகிறது.

இந்த அமர்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தனது சாட்சியங்களைப் பதிவுசெய்துள்ளார்.

இன்றைய அமர்வில் 60 பேர் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அமர்வின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் சட்டத்தரணிகளும் கலந்து கொண்டுள்ளனர்.