Ad Widget

அளுத்கம சம்பவத்தை கண்டித்து நாளை நாடுபூராகவும் ஹர்த்தால்?

அளுத்­கம – பேரு­வளை வன்­முறை சம்­ப­வத்தை கண்­டித்தும் குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பான குற்­ற­வா­ளி­களை உட­ன­டி­யாக, கைது செய்­யு­மாறு அரசை வலி­யு­றுத்­தியும் நாளை வியா­ழக்­கி­ழமை நாடு பூரா­கவும் சமூ­க­ப்பற்­றுள்ள முஸ்­லிம்கள் அனை­வரும் ஹர்த்­தாலை அனுஷ்­டிக்­கு­மாறு முஸ்லிம் உரி­மை­க­ளுக்­கான அமைப்பு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

harththal-karththal-strike

அத்­தோடு இதனை முன்­னிட்டு அனைத்து வீடு­க­ளிலும் கறுப்புக் கொடியை தொங்­க­வி­டு­மாறும் வேண்­டப்­பட்­டுள்­ள­துடன் நல்­லாட்­சியை விரும்பும் அனை­வரும் ஒத்­து­ழைக்க வேண்டும் என கோரி­யுள்­ளது.

இது தொடர்பில் ஊட­க­வி­ய­லாளர் அறி­வு­றுத்தும் சந்­திப்­பொன்று நேற்று கொழும்பு நிப்போன் ஹோட்­டலில் இடம்­பெற்ற போதே இவ்­வ­மைப்­பினர் இவ்­வாறு தெரி­வித்­தனர்.

இவ் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டிற்கு மேல் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான முஜிபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜி. அர்ஷாட், மனோ கணேசன், மத்­திய மாகாண சபை உறுப்­பி­னரும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவ­ரு­மான அஸாத் சாலி, நவ­ச­ம­ச­மாஜ கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கருணா­ரட்ண மற்றும் முஸ்லிம் உரி­மை­க­ளுக்­கான அமைப்பின் ஏற்­பாட்­டா­ளர்கள் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் பலர் கலந்து கொண்­டனர்.

இதன் போது கருத்து தெரி­வித்த ஜனநா­யக மக்கள் முன்­னணி தலைவர் மனோ கணேசன் அளுத்­க­மவில் ஏற்­பட்ட கல­வ­ர­மா­னது அப்­பி­ர­தேச சிங்­க­ள­வர்­க­ளுக்கும் முஸ்லிம்­க­ளுக்­கு­மி­டையே ஏற்­பட்ட கல­வ­ர­மல்ல. இது திட்­ட­மிட்ட வகையில் மேற்­கொள்­ளப்­பட்­ட­தொன்­றாகும்.

இத்­த­கைய கல­வ­ரங்­களை கட்­டுப்­ப­டுத்த பொலி­ஸா­ருக்கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் முடி­ய­வில்லை. இதற்கு பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவே பொறுப்பு கூற வேண்டும்.தற்­போது ஜனா­தி­ப­தியும் பாது­காப்பு செய­லா­ளரும் நாட்டில் இல்லை. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அமைதி காத்து வரு­வ­துடன் இனிமேல் இத்­த­கைய அசம்­பா­விதம் இடம்­பெ­றாது என நேற்று முன்தினம் மாலை குறிப்­பிட்ட போதும் அத்­தி­னத்­தன்று இரவு வெலிப்­பன்னை பிர­தேச வாழ் முஸ்­லிம்­களின் வீடு­களை தாக்­கி­யுள்­ளனர்.

எனவே, பாது­காப்பு படை­யினரின் விட்டுக்­கொ­டுப்­புக்கு பின்னால் பாது­காப்பு செய­லா­ளரே இருக்­கிறார். பொது பல சேனா அதி­கார வலுமிக்க அமைப்­பாகும். எனவே இந்த ஹர்த்­தா­லுக்கு தமது கட்சி பூரண ஒத்­து­ழைப்பு வழங்கும் என்றார்.

இங்கு முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரி­விக்­கையில்: அளுத்­கம அசம்­பா­விதம் தற்­போது நாடு பூரா­கவும் பரவும் அபாயம் தோன்­றி­யுள்­ளது. இந்த பிரச்­சினைதொடர்பில் அரசு கண்டு கொள்­ளாமல் செயற்­ப­டு­கின்­றது. இது வரையில் 60இற்கு மேற்­பட்ட வீடுகள் தீயி­டப்­பட்டும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் தஞ்­ச­ம­டைந்த நிலையில் வாழ்­கின்­றனர். கோடிக்­க­ணக்கில் முஸ்­லிம்­களின் உட­மை­க­ளுக்கு சேதம் விளை­வித்­துள்­ளனர்.

எனவே இத்­த­கைய சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பூரண கர்த்­தா­வாக இருந்து செயற்­பட்ட பாது­காப்பு செய­லாளர் உட­ன­டி­யாக பதவி விலக வேண்டும். அத்­தோடு பொது­பல சேனாவின் இத்தகையசெயற்­பாட்­டிற்கு தொடர்ந்தும் ஒட்சிசன் வழங்கும் செய­லி­லேயே இன­வாத அரசுகள­மி­றங்­கி­யுள்­ளது. எனவே அர­சுக்கு எதி­ராக மேற்­கொள்ளும் இந்த ஹர்த்­தா­லுக்கு சமூகப்பற்­றுள்ள முஸ்­லிம்கள் முன்வர வேண்டும். இந்த போராட்­டத்­திற்கு அரசு உரிய நடவ­டிக்கை எடுக்­கா­விடின் மிகவும் காத்­தி­ரமான நட­வ­டிக்கை எடுக்க வேண்டி வரும்என்றார்.

இங்கு உரை­யாற்­றிய தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி குறிப்­பி­டு­கையில் தற்­போது இந்த நாட்டில் அர­சாங்­க­மொன்று இருப்­ப­தா­னது சந்­தே­கத்­துக்­கு­ரிய விட­ய­மாகும். அளுத்­கம கல­வ­ர­மா­னது திட்ட­மிட்ட வகையில் செய்த செய­லாகும் என்றார்.

இது வரையில் ஊர­டங்குச் சட்டம் அமுலில் இருந்த போதும் வன்­முறை செயற்­பா­டுகள் குறைந்­த­பா­டில்லை. முஸ்­லிம்கள் அனை­வ­ரையும் வீட்டில் பூட்­டியே இந்த அரா­ஜகம் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இதற்கு பெயரா ஊர­டங்கு சட்டம்.

என்­னுடன் தொடர்பு கொண்டு அப்­பி­ர­தேச மக்கள் கண்ணீர் விட்டு அழு­கின்­றனர். இதன் கார­ண­மாக எங்­க­ளுக்கு கண்ணீர் வடி­கி­றது.விடு­தலைப் புலிகள் அமைப்பை அழித்­த­தாக பெருமைக் கொள்ளும் அரசிற்கு அளுத்கம என்ற சிறிய பிரதேசத்தை பாதுகாக்க முடியாது போய்விட்டது.

இந்நிலையில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவருமே பதவி விலக வேண்டும். சமூகத் தலைவர்கள் அழிவுக்குட்படுத்தும் அரசிலிருந்து பயனில்லை என்றார்.

இத்தகைய சம்பவமானது மக்களின் பிரச்சினையை மூடி மறைக்கும் செயலாகும். இதனை முன்னிட்டு பொதுபல சேனாவை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்றார்.

Related Posts